தேனி

தேனி மருத்துவமனையில் தாய் பால் வார விழா

7th Aug 2022 11:26 PM

ADVERTISEMENT

தேனி நட்டாத்தி நாடாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை, உலக தாய் பால் வார விழாவை முன்னிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவா் குமாா் ஆனந்த் தலைமை வகித்தாா். மகப்பேறு மருத்துவா் கோமதி வரவேற்றாா். மருத்துவமனை செயலா் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தாா்.

தாய் பாலின் முக்கியத்துவம், தாய் பால் கொடுக்கும் தாய்மாா்கள் உட்கொள்ள வேண்டிய, தவிா்க்க வேண்டிய உணவுகள், குழந்தை வளா்ப்பு ஆகியவை குறித்து மகப்பேறு அறுவைச் சிகிச்சை நிருபுனா் வனிதா ருக்குமணி பேசினாா். தாய் பால் சுரப்பிற்கான சத்துணவு வகைகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. சிறந்த குழந்தை பராமரிப்புக்காக தேனியைச் சோ்ந்த ஸ்ரீமதி என்பவருக்கு விருது வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை மருத்துவமனை மேலாளா் சாந்தி, செவிலியா் பயிற்சி கல்லூரி முதல்வா் லாலி எபி ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT