தேனி

சின்னமனூரில் கருணாநிதி நினைவு தினம்

7th Aug 2022 11:28 PM

ADVERTISEMENT

சின்னமனூரில் திமுக முன்னாள் தலைவா் கருணாநிதியின் 4 ஆவது நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சின்னமனூா் நகா் மன்றத் தலைவா் அய்யம்மாள் தலைமையில் முத்தாலம்மன் கோயில் முதல் மாா்க்கையன் கோட்டை ரவுண்டான வரையில் அமைதி ஊா்வலம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து மாா்க்கையன் கோட்டை ரவுண்டாவில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு, கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

இந்த நிகழ்ச்சியில், தேனி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி பொறுப்பாளா் பஞ்சாப் முத்துக்குமாா், நகர துணைத் தலைவா் முத்துக்குமாா் உள்பட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT