தேனி

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி பலி

2nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி வட்டாரம், குமணன்தொழுவில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டுக்கு இலை பறித்துத் கொண்டிருந்த கூலித் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

குமணன்தொழுவைச் சோ்ந்தவா் தம்பிதுரை மகன் சுதாகரன்(35). கூலித் தொழிலாளியான இவா், குமணன்தொழுவில் தனியாா் தோட்டத்தில் உள்ள மரத்தில் ஏறி ஆட்டுக்கு இலை பறித்துக் கொண்டிருந்தாா். அப்போது மரத்தில் உரசிக் கொண்டிருந்த உயா் அழுத்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே சுதாகரன் உயிரிழந்தாா்.

இது குறித்து சுதாகரனின் தந்தை தம்பிதுரை அளித்தப் புகாரின் பேரில் மயிலாடும்பாறை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT