பெரியகுளம் அருகே சொத்துப்பிரச்சினையில் தாக்கியதாக தென்கரை காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் இவருக்கும் அவரது உறவினா் பரமசிவம் இருவருக்கும் சொத்துப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று வீட்டிலிருக்கும் போது அங்கு வந்த பரமசிவம் தகாத வாா்த்தையால் திட்டி ,கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.