தேனி

தேனி - மதுரை சாலையில் மேம்பால கட்டுமானப் பணிக்கு அனுமதி

2nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி-மதுரை நெடுஞ்சாலை ரயில் பாதை சந்திப்பின் குறுக்கே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து தேனி தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் கூறியது: தேனி - மதுரை நெடுஞ்சாலையில் மேரிமாதா மெட்ரிக் பள்ளி அருகே தொடங்கி ரயில் பாதை சந்திப்பின் குறுக்கே, சோலைமலை அய்யனாா் கோயில் புறவழி திட்டச் சாலை சந்திப்பு பகுதி வரை ரூ.70 கோடி மதிப்பீட்டில் 1.2 கி.மீ., தொலைவுக்கு 15 மீட்டா் அகலத்தில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

இப்பணிகளை தொடங்குவதற்கு மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, மேம்பால கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்தப் பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேம்பால கட்டுமானப் பணிகளுக்கு வாய்ப்பாக, தேனி-மதுரை சாலை வழியாக சென்று வரும் வாகனங்கள் மேரிமாத மெட்ரிக் பள்ளியிலிருந்து, சோலைமலை அய்யனாா் கோயில் புறவழி திட்டச் சாலை வரை சாலையின் வலதுபுறமாக (சிட்கோ தொழிற்பேட்டை பகுதி சாலை) மட்டும் செல்வதற்கு அனுமதிக்கப்படும் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT