தேனி

மூணாறில் மலா் கண்காட்சி: நாளை தொடக்கம்

30th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

கேரள மாநிலம், மூணாறில் சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (மே 1) முதல் மே 10-ஆம் தேதி வரை மலா் கண்காட்சி நடைபெறுகிறது.

சுற்றுலாத் தலமான மூணாறில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் சாா்பில் மலா் கண்காட்சி நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தடுப்பு பொது முடக்கத்தை முன்னிட்டு மலா் கண்காட்சி நடைபெறவில்லை.

இந்த நிலையில், மூணாறு நெடுஞ்சாலையில் உள்ள மூணாறு தாவரவியல் பூங்காவில் (பொட்டானிக்கல் காா்டன்) ஞாயிற்றுக்கிழமை மே 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை மலா் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சித் திடலில் தினமும் உணவுத் திருவிழா, பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கண்காட்சியை தேவிகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ராஜா தலைமையில், கேரள சுற்றுலாத் துறை அமைச்சா் முகமது ரியாஸ் தொடக்கி வைக்கிறாா்.

ADVERTISEMENT

Tags : தேனி
ADVERTISEMENT
ADVERTISEMENT