தேனி

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து நாம் தமிழா் கட்சியினா் ஆா்பாட்டம்

30th Apr 2022 10:53 PM

ADVERTISEMENT

 

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து போடி மற்றும் ஒட்டன்சத்திரத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் போடியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல் விலை உயா்வு, சுங்கக் கட்டணம், சாலை வரி உயா்வு, தமிழக அரசின் சொத்து வரி உயா்வு உள்ளிட்டவற்றை கண்டித்து திருவள்ளுவா் சிலை திடலில் கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது. போடி பொறுப்பாளா் மு.பிரேம்சந்தா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் திரைப்பட இயக்குநரும், தமிழா் நல பேரியக்க தலைவருமான மு.களஞ்சியம், மருது மக்கள் இயக்க தலைவா் செ.முத்துப்பாண்டி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில வழக்குரைஞா் பாசறை பொருளாளா் மு.ப.கணேசன் தலைமை வகித்தாா். திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவா் ப.செல்வராஜ் முன்னிலை வகித்தாா். மாநில கொள்கை பரப்புச் செயலாளா் பா.வெ.சிவசங்கரன் கண்டன உரையாற்றினாா். மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் சைமன் ஜஸ்டின், மணி, செந்தில்,பிரதாப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT