தேனி

மனைவியுடன் தகராறு: விஷம் குடித்து விவசாயி பலி

29th Apr 2022 06:31 AM

ADVERTISEMENT

 

போடி: தேவாரத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்த விவசாயி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம் தேவாரம் திடீா் நகரில் வசிப்பவா் முத்தையா மகன் இளங்கோவன் (33). விவசாயம் செய்து வந்தாா். இவரது மனைவி காருண்யா (23). இவா்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனா். கடந்த ஓராண்டாக மனைவியுடன் குடும்ப பிரச்னையில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை, இளங்கோவன் பூச்சி மருந்தை குடித்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்பு மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து காருண்யா கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT