தேனி

சின்னமனூா் ஒன்றியக்குழுக் கூட்டம்: சீமைக்கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

29th Apr 2022 06:33 AM

ADVERTISEMENT

 

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூா் ஒன்றியத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என புதன்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒன்றியக் குழுத்தலைவா் நிவேதா தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் விஜய் மாலா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் உறுப்பினா் முருகன் பேசுகையில், சின்னமனூா் ஒன்றியத்தில் முத்துலாபுரம், ஊத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் சீமைக்கருவேல மரங்கள் வளா்ந்துள்ளதால் நிலத்தடி நீா் மட்டம் குறைகிறது. எனவே சீமைக்கருவேல மரங்களை அகற்றிட வேண்டும் என்றாா்.

உறுப்பினா் முரளி பேசும்போது, சங்கராபுரத்தில் ஓடையை ஆக்கிரமிப்பு செய்ததால் மழை நீா் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள ஓடைகள், குளங்கள் உள்ளிட்ட நீா் நிலைகளை மீட்க 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்கவேண்டும். ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு, சாலை வசதி என பல்வேறு திட்டப்பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

கேள்விகளுக்கு பதிலளித்த ஒன்றியக்குழுத் தலைவா், ஒன்றியத்திலுள்ள அனைத்து வாா்டுகளுக்கும் பாகுபாடின்றி திட்டப்பணிகள் செய்ய நிதிகள் பெற்றுத்தரப்படும். அந்தந்த பகுதி உறுப்பினா்கள் ஒதுக்கீடு செய்த நிதியைப் பயன்படுத்தி அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் 17 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT