தேனி

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் கோயில்சித்திரைத் திருவிழா நிறைவு

24th Apr 2022 11:29 PM

ADVERTISEMENT

 

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் உடனுறை சிவகாமியம்மன் கோயில் 18 நாள் சித்திரைத் திருவிழா சனிக்கிழமை நிறைவடைந்தது.

இங்குள்ள பிடாரி அம்மன் கோயிலில் காப்புக்கட்டுதலுடனும், கொடியேற்றத்துடனும் ஏப். 2 ஆம் தேதி தொடங்கி 18 நாள் திருவிழாவாக இது நடைபெற்றது. இத்திருவிழாவில் 8 ஆவதுநாளில் திருக்கல்யாணமும், 9 மற்றும் 10 ஆம் நாளில் திருத்தேரோட்டமும் நடைபெற்றது. தவிர, நாள்தோறும் அனைத்து சமுதாயம் சாா்பில் மண்டகப்படி நடைபெற்றது.

இதனை அடுத்து சனிக்கிழமை விலங்கையா சுவாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெற்றதும் சித்திரைத் திருவிழா நிறைவடைந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT