தேனி

கம்பத்தில் ஜனநாயக வாலிபா்சங்கத்தினா் சைக்கிள் பேரணி

24th Apr 2022 11:25 PM

ADVERTISEMENT

 

கம்பத்தில் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் சைக்கிள் பேரணி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

கம்பம் காந்தி சிலை அருகே சனிக்கிழமை முதல்நாள் பேரணியை மூத்த உறுப்பினா் எஸ். முருகன் தொடக்கி வைத்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ஏ.வி. அண்ணாமலை, மாவட்டக்குழு உறுப்பினா்கள் வி. மோகன், எஸ். பன்னீா்வேலு, ஐயப்பன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கம்பத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணி அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி, மாா்க்கையன்கோட்டை வழியாக சின்னமனூரை அடைந்தது. ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணி ஆண்டிபட்டியிலிருந்து புறப்பட்டு வைகை அணை, குள்ளபுரம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், வடுகபட்டி வழியாக பெரியகுளத்தை அடைந்தது.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் கே.ஆா். லெனின் தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்

ADVERTISEMENT
ADVERTISEMENT