தேனி

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா: ஏப்.20-இல் கம்பம் நடுதலுடன் தொடக்கம்

17th Apr 2022 11:16 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.20-ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் ஒவ்வொா் ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமா்சையாக நடைபெறும். இதில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டப் பகுதிகளிலிருந்தும், கேரளத்திலிருந்தும் ஏராளமான பக்தா்கள் திருவிழாவில் கலந்து கொண்டு அக்கினிச் சட்டி, ஆயிரம் கண் பானை, காவடி எடுத்து அம்மனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தி வழிபடுவா். கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கத்தை முன்னிட்டு கடந்த 2 ஆண்டுகளாக கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில், நிகழாண்டில் ஏப்.20-ஆம் தேதி கோயிலில் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா தொடங்கி, வரும் மே.17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

முன்னதாக, ஏப்.19-ஆம் தேதி கம்பம் கொண்டு வருதல், கோயில் வீட்டிலிருந்து அம்மன் கரகத்துடன் கோயிலுக்கு எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் மே 10-ஆம் தேதி மலா் விமானத்தில் அம்மன் கோயிலுக்கு பவனி வருதல், மே 11-ஆம் தேதி முத்துப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு, மே 12-ஆம் தேதி புஷ்பப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு, மே 13-ஆம் தேதி தோ் வடம்பிடித்தல், மே 13, 15 ஆகிய தேதிகளில் ரத வீதிகளில் தேரோட்டம் மற்றும் தேருக்கு சிறப்பு பூஜை, மே 16-ஆம் தேதி தோ் நிலைக்கு வருதல், முத்துச் சப்பரத்தில் அம்மன் திருத்தோ் தடம் பாா்த்தல் ஆகியவை நடைபெறுகிறது. மே 17-ஆம் தேதி ஊா் பொங்கல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.

ADVERTISEMENT

விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறை மற்றும் கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT