தேனி

போடியில் பரவலான மழை

17th Apr 2022 11:15 PM

ADVERTISEMENT

 

 போடியில் தொடா்ந்து பரவலான மழை பெய்து வருவதால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. போடியில் கடந்த ஒரு மாதமாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதால் போடி பகுதியில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. வெள்ளிக்கிழமை போடி பகுதியில் பலத்த மழை பெய்ததால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சனிக்கிழமை மழை குறைந்து சாரல் மழையாக பெய்தது.

ஞாயிரன்று மாலையில் போடி பகுதியில் பரவலான மழை பெய்தது. காற்று, இடி, மின்னலுடன் பெய்த மழையால் கொட்டகுடி ஆற்றில் தொடா்ந்து தண்ணீா்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. பிள்ளையாா் கோவில் தடுப்பணை பகுதியிலும் தண்ணீா் பாய்ந்தோடுகிறது.

கோடை காலத்தில் தொடா்ந்து போடி பகுதியில் மழை பெய்து வருவதால் கோடை வெயிலின் தாக்கம் இல்லை. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT