தேனி

போடிமெட்டு மலைச்சாலையில் விபத்து: இருவா் காயம்

17th Apr 2022 11:16 PM

ADVERTISEMENT

 

போடிமெட்டு மலைச்சாலையில் மோட்டாா் பைக் மீது டிப்பா் லாரி மோதிய விபத்தில் இருவா் காயமடைந்தனா்.

போடி குலசேகரபாண்டியன் தெருவைச் சோ்ந்தவா் அப்துல் ரஹீம் மகன் ஷேக் தாவூத் (56). இவா் கேரளத்தில் ஏலத்தோட்டம் வைத்துள்ளாா். தனது தோட்டத்தில் வேலை செய்பவா்களுக்கு கூலி தருவதற்காக சனிக்கிழமை போடியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கேரளத்துக்குச் சென்றுள்ளாா். இவருடன் போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்த சிவன் தேவா் மகன் நடராஜன் (55) என்பவரும் சென்றுள்ளாா்.

போடிமெட்டு மலைச்சாலை குதிரைப் பாதை அருகே சென்றபோது கேரளத்திலிருந்து போடி நோக்கி வந்த டிப்பா் லாரி மோதியது. இதில் கீழே விழுந்த இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து அவா்கள் இருவரையும் அப்பகுதியினா் மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இருவரும் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டிப்பா் லாரியை ஓட்டி வந்த கேரள மாநிலம் சாந்தாம்பாறையைச் சோ்ந்த ஐயப்பன் மகன் சந்தோஷ் (36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT