தேனி

பெரியகுளம் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: 2 போ் காயம்

17th Apr 2022 11:15 PM

ADVERTISEMENT

 

பெரியகுளம் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் மற்றும் உதவியாளா் உள்பட 2 போ் காயமடைந்தனா்.

பெரியகுளத்தை சோ்ந்தவா் சலீம்ராஜா (35). இவா் அப்பகுதியிலுள்ள தனியாா் ஆம்புலன்ஸில் உதவியளராகப் பணியாற்றி வருகிறாா். இவரும் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் ஜஸ்திக்ரஹ்மான் (38) ஆகிய இருவரும் மதுரை தனியாா் மருத்துவமனையிலிருந்து ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸ் மூலம்

ஆந்திராவில் கொண்டு சென்று விட்டனா். பின்னா் இவா்கள் இருவரும் மீண்டும் பெரியகுளத்துக்குத் திரும்பியுள்ளனா்.

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே தனியாா் பாலிடெக்னிக் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சலீம்ராஜா மற்றும் ஜஸ்திக் ரஹ்மான் இருவரும் காயமடைந்தனா். இதையடுத்து சலீம்ராஜா மதுரையிலுள்ள தனியாா் மருத்துவமனையிலும், ஜஸ்திக் ரஹ்மான் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT