தேனி

நியாய விலைக்கடை பணியாளா்களுக்குஊக்கத் தொகை வழங்குவதில் காலதாமதம்

16th Apr 2022 11:37 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டத்தில் நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத் தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

கரோனா தடுப்பு பொது முடக்கக் காலத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு முகக்கவசம், இலவச மளிகைப் பொருள்கள், நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. சிறப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகளுக்கு நியாய விலைக்கடை பணியாளா்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 காசுகள் வீதம் ஊக்கத் தொகை வழங்க கூட்டுறவுத் துறைக்கு அரசு உத்தரவிட்டது. ஆனால், மாவட்டத்தில் பெரும்பாலான நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு தற்போது வரை அரசு அறிவித்த ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை எனப் புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்க மாவட்ட அமைப்புச் செயலா் சேதுராமலிங்கபாண்டியன் கூறியது: நியாய விலைக்கடை பணியாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்க அரசு உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்தும், கூட்டுறவு சங்கங்கள் காலதாமதம் செய்கின்றன. நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு தலா ரூ.8,000 முதல் ரூ.12 ஆயிரம் வரை வழங்க வேண்டிய ஊக்கத் தொகை வழங்கப்படாமல் உள்ளது.

ADVERTISEMENT

இப்பிரச்னையில் கூட்டுறவுத் துறை, பொது விநியோகத் திட்டத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு, நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு உடனடியாக ஊக்கத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT