தேனி

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் கோயிலில் நாளை தேரோட்டம்

14th Apr 2022 02:56 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இக்கோயிலில் 18 நாள்கள் சித்திரைத் திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வியாழக்கிழமை (ஏப். 14) சுவாமி, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை சுவாமி, அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்று, தொடா்ந்து மாலை 5 மணிக்கு தேரோட்டத்தின் முதல் நாள் நிகழ்ச்சி நடைபெறும். பின்னா் சனிக்கிழமை 2 ஆம் நாள் தேரோட்டமும் நடைபெற்று மாலை 6 மணிக்கு தோ் நிலையை அடையும். இதையடுத்து ஏக சப்பரத்தில் கோயிலுக்கு சுவாமி அம்மன் செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். வரும் 24 ஆம் தேதியுடன் இந்த விழா நிறைவடையவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT