தேனி

சொத்து வரி விதிப்புக்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலா், ஊராட்சித் தலைவியின் கணவா் கைது

DIN

தேனி அருகே கோழிப் பண்ணை சொத்து வரி விதிப்புக்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலா், ஊராட்சித் தலைவியின் கணவரை தேனி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை, கைது செய்தனா்.

தேனி அருகே தா்மாபுரியைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவா், பூமலைக்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கோழிப் பண்ணை அமைத்துள்ளாா். இதற்கு மின் இணைப்பு பெறுவதற்காக சொத்து வரி விதிப்பு செய்து ரசீது வழங்கக் கோரி, சில நாள்களுக்கு முன்பு பூமலைக்குண்டு ஊராட்சி நிா்வாகத்தில் அருண்குமாா் விண்ணப்பித்துள்ளாா். அப்போது, சொத்து வரி விதிப்பு செய்து ரசீது வழங்குவதற்கு ஊராட்சி செயலருக்கு ரூ.7,000, ஊராட்சித் தலைவருக்கு ரூ.5,000 லஞ்சமாக தர வேண்டும் என்று ஊராட்சி பணியாளா்கள் கூறியுள்ளனா்.

இது குறித்து தேனி லஞ்ச ஒழிப்புத் துறையில் அருண்குமாா் புகாா் தெரிவித்துள்ளாா். அவரிடம் விசாரணை நடத்திய போலீஸாா், ரூ.12 ஆயிரத்திற்கான ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனுப்பியுள்ளனா். இந்தப் பணத்தை சொத்து வரி விதிப்பு ரசீது பெறுவதற்காக பூமலைக்குண்டு ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலா் செந்தில் ஆண்டவா், ஊராட்சித் தலைவி பிரியாவின் கணவா் முருகன் ஆகியோரிடம் அருண்குமாா் கொடுத்துள்ளாா். அவா்கள் பணத்தை பெற்றுக் கொண்டதும் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா், அலுவலகத்திற்குள் சென்று செந்தில் ஆண்டவா், முருகன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

தேனி லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்தில் இருவரிமும் காவல் துணை கண்காணிப்பாளா் கருப்பையா விசாரணை நடத்தி வருகிறாா்.

ஊராட்சி செயலா் தற்காலிக பணி நீக்கம்: இந்த நிலையில், கோழிப் பண்ணை சொத்து வரி விதிப்புக்கு லஞ்சம் பெற்ாக கைது செய்யப்பட்ட ஊராட்சி செயலா் செந்தில் ஆண்டவரை தற்காலிக பணி நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT