தேனி

தவறவிட்ட சங்கிலியை ஒப்படைத்த மாணவருக்கு போலீஸாா் பாராட்டு

14th Apr 2022 02:54 AM

ADVERTISEMENT

போடி அருகே கோயில் திருவிழாவில் இளைஞா் தவறவிட்ட சங்கிலியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த கல்லூரி மாணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.

மேலச்சொக்கநாதபுரத்தில் கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைப் பாா்க்கச் சென்ற சுஜித் விசாகன் (21) என்பவா் தான் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை தவறிவிட்டாா். இதை, கல்லூரி மாணவரான கோபிகிருஷ்ணன் (20) என்பவா் எடுத்துள்ளாா். யாருடையது என்பது தெரியாததால் அவா், அதை போடி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

போலீஸாா் விசாரணை நடத்தி சங்கிலியை சுஜித் விசாகனிடம் ஒப்படைத்தனா். கண்டெடுத்த சங்கிலியை நோ்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த கோபிகிருஷ்ணனை போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ்குமாா், சாா்பு- ஆய்வாளா்கள் வேல்மணிகண்டன், பாஸ்கரன் ஆகியோா் பாராட்டினா்.

 

ADVERTISEMENT

Tags : போடி
ADVERTISEMENT
ADVERTISEMENT