தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹவுதியா கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் தேசிய கருத்தரங்கம் புதன்கிழமை, நடைபெற்றது.
தமிழ்நாடு ஸ்டேட் கவுன்சில் ஹையா் எஜுகேசன் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் தாளாளா் எம்.தா்வேஷ் முகைதீன் மற்றும் கல்லூரியின் தலைவா் செந்தல் மீரான் தலைமை வகித்தனா்.
வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறையில் ஆயிரக்கணக்கான தொழில் முனைவோரின் வாய்ப்புகள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி பாரதிதாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியா் சாகுல் ஹமீது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.
முன்னதாக, கல்லூரியின் வணிகவியல் துறைத் தலைவா் அப்பாஸ் மந்திரி வரவேற்றாா். முக்கிய நிகழ்ச்சியாக , மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் எழுதிய 4 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இதில் மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.