ஆண்டிபட்டி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில், முதியவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
நாச்சியாா்புரத்தைச் சோ்ந்தவா் திருவேங்கடம் (64). இவா், அதே ஊரைச் சோ்ந்த தனது உறவினா் ராஜேந்திரபிரசாத் (29) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் நாச்சியா்புரத்திலிருந்து தேனி நோக்கிச் சென்றுள்ளாா்.
ஆண்டிபட்டி-தேனி சாலையில் எஸ்.ரங்கநாதபுரம் விலக்கு பகுதியில், அதே திசையில் தேனி நோக்கிச் சென்றுகொண்டிருந்த காா் மோதியதில், திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ராஜேந்திரபிரசாத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறாா்.
இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான மதுரை திருமோகூரைச் சோ்ந்த தங்கவேலு (56) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.