தேனி

தேனி மாவட்டத்தில் 1,379 பேருக்கு விவசாய மின் இணைப்பு

2nd Apr 2022 01:28 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் புதிதாக 1,379 பேருக்கு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் புதிதாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தில், மாவட்டத்தில் மொத்தம் 1,727 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், இதுவரை பெரியகுளம் சட்டப் பேரவைக்கு உள்பட்ட பகுதிகளில் 254 விவசாயிகள், ஆண்டிபட்டி தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் 292 விவசாயிகள், போடி தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் 295 விவசாயிகள், கம்பம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் 538 விவசாயிகள் என மொத்தம் 1,379 விவசாயிகளின் விவசாய நிலங்களுக்கு புதிதாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT