சின்னமனூா் பகுதியில் 2 புதிய ரேஷன் கடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
சின்னமனூா் ஊராட்சி ஒன்றியம் அப்பிபட்டி (எ) அழகாபுரி ஊராட்சியிலுள்ள முத்துகிருஷ்ணாபுரத்தில் புதிய ரேஷன் கடைக்கான புதிய கட்டடம் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. அதே போல முத்துலாபுரம் ஊராட்சியிலும் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது.
இந்த கட்டடங்களை கம்பம் சட்டப் பேரவை உறுப்பினா் என்.ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்து பொதுமக்களுக்கு பொருள்களை விநியோகம் செய்தாா்.
இதில், சின்னமனூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் நிவேதா, அப்பிபட்டி (எ) அழகாபுரி ஊராட்சித் தலைவா் பாண்டியராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.