தேனி

முல்லைப் பெரியாறு அணையில் நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி பொறியாளர்கள் ஆய்வு

30th Sep 2021 05:28 PM

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி பொறியாளர்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனர். 

நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி பொறியாளர்கள், பொதுப்பணித் துறையினர் அனுமதியுடன், ஆண்டு தோறும் கள ஆய்வில் 21 நாள்கள் அணைகள், மற்றும் மின்நிலையங்களை ஆய்வு செய்வது வழக்கம். 

இதன் ஒரு பகுதியாக மதுரை ஸ்டாப் டிரைனிங் இன்ஸ்டியூட் நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி நிறுவன பொறியாளர்கள் 30 பேர்கள் இயக்குநர் திலகவதி தலைமையில் பெரியாறு அணை பகுதியில் ஆய்வு செய்தனர்.

இதையும் படிக்க- கடலூரில் வீட்டு பூந்தொட்டியில் கஞ்சா பயிரிட்ட 2 பேர் கைது

ADVERTISEMENT

முன்னதாக இவர்கள் தேக்கடி படகுத்துறையிலிருந்து தமிழக பொதுப்பணி துறையினரின் இரண்டு படகுகளில் அணைக்கு சென்றனர். 

அங்கு பெரியாறு அணை, மதகுப்பகுதி, பேபிஅணை ஆகியவற்றில் களஆய்வு நடத்தினர்.  இந்த ஆய்வின்போது தமிழக பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவிப்பொறியாளர்கள் ராஜகோபால், குமார் பயிற்சி அலுவலர்களுக்கு விளக்கம் கொடுத்தனர்.
 

Tags : Mullaperiyar Dam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT