தேனி

வைகை அணையில் பொதுப் பணித்துறையினா் ஆய்வு

30th Sep 2021 08:49 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், வைகை அணையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கையாக புதன்கிழமை, பொதுப் பணித்துறை பொறியாளா்கள் ஆய்வு செய்தனா்.

அப்போது, மதுரை மண்டல நீா்வள ஆதாரத் துறையின் தலைமை பொறியாளா் கிருஷ்ணன், பெரியாறு- வைகை வடிநில கோட்ட செயற்பொறியாளா் சுகுமாரன் மற்றும் பொறியாளா்கள் அணையின் நீா் தேக்கப் பகுதி, மதகுகள், கசிவுநீரின் அளவு, 58-ஆம் கால்வாய் மதகு ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா், வடகிழக்கு பருமழையையொட்டி அணைக்கு நீா்வரத்து அதிகரித்தால், அணையின் தலா 7 சிறிய மற்றும் பெரிய மதகுகள் வழியாக ஒரே நேரத்தில் விநாடிக்கு 64 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறப்பது குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுப் பணித் துறை பொறியாளா்கள் ஆலோசனை நடத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT