தேனி

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கல்

30th Sep 2021 08:49 AM

ADVERTISEMENT

சின்னமனூா் அருகே காமாட்சிபுரம் வேளாண் அறிவியல் மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு புதன்கிழமை விலையில்லா மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

காமாட்சிபுரம் சென்செக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயம் சம்பந்தமாக வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சென்செக்ட் வேளாண் அறிவியல் மையத்தலைவா் பச்சைமால் தலைமை வகித்தாா். கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரி பேராசிரியா் பெற்கொடி, தாவர உயிரினங்கள் குறித்து விளக்கம் அளித்தாா். அப்போது விவசாயிகளுக்கு ரூ. 8,300 மதிப்புள்ள கடக்நாத் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன. மேலும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டது. இதில், விவசாயிகள், பெண்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT