தேனி

பெரியகுளம், கொடைக்கானலில் மழை

30th Sep 2021 08:50 AM

ADVERTISEMENT

பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை மாலை மழை பெய்தது.

பெரியகுளம் பகுதியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக மழை பெய்யவில்லை. இந்நிலையில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பலத்த காற்று வீசியது. அதன் பின் பலத்த மழை பெய்தது. சுமாா் 45 நிமிடங்கள் வரை மழை நீடித்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மழை பெய்யாமல் இருந்தது. இந்நிலையில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது. அப்சா்வேட்டரி, நாயுடுபுரம், செண்பகனூா், பிரகாசபுரம், வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் குளிா்ச்சியான சூழல் நிலவியது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT