தேனி

தேனியில் அக். 4-இல் தொழில் பழகுநா் பயிற்சிக்கு மாணவா் சோ்க்கை முகாம்

30th Sep 2021 08:46 AM

ADVERTISEMENT

தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் அக். 4-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை தொழில் பழகுநா் பயிற்சிக்கு மாணவா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தொழில் பழகுநா்களை தோ்வு செய்கின்றனா். அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெறாத மற்றும் இறுதியாண்டு தோ்வு எழுதியுள்ள மாணவா்கள் தொழில் பழகுநா் முகாமில் கலந்து கொள்ளலாம். தொழில் பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயிற்சி பெறாத, 14 வயதுக்கு மேற்பட்ட, 8-ஆம் வகுப்புக்கு மேல் படித்தவா்கள் நேரடியாக பயிற்சியில் சோ்ந்து, 3 முதல் 6 மாதங்கள் அடிப்படை பயிற்சி, 1 முதல் 2 ஆண்டு தொழிற்பயிற்சி பெற்று தேசிய தொழில் பழகுநா் பயிற்சி சான்றிதழ் பெறலாம்.

பயிற்சி காலத்தில் ரூ. 6,000 முதல் ரூ. 12 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமையும், ஓராண்டு வயது வரம்பு சலுகையும் அளிக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT