தேனி

உத்தமபாளையம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றத்தில் பொதுமக்கள் அதிருப்தி

30th Sep 2021 08:47 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே வாய்க்கால்பட்டியில் பேருந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில் அது வெறும் கண்துடைப்பு என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

உத்தமபாளையம் அருகேயுள்ள வாய்க்கால்பட்டிக்கு சின்னமனூா், கம்பம் வழியாக நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்கிடையே பல ஆண்டுகளுக்குப் பின் உத்தமபாளையத்திலிருந்தும் அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. இந்நிலையில், வாய்க்கால்பட்டியில் பல இடங்களில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் பேருந்துகள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அரசுப் பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள் என அனைத்து கனரக வாகனப் போக்குவரத்தும் தடைபட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்திடமும், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியரிடமும் முறையிட்டனா்.

இதையடுத்து, உத்தமபாளையம் வட்டாட்சியா் அா்ஜூன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கண்துடைப்பு எனவும், மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து அந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT