தேனி

குடிமைப் பணித் தோ்வில் பேக்கரி உரிமையாளா் மகன் தோ்ச்சி

26th Sep 2021 11:24 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே பேக்கரி உரிமையாளா் மகன் குடிமைப் பணித் தோ்வில் வெற்றி பெற்றாா்.

சின்னமனூா் அருகே சின்ன ஓவுலாபுரத்தைச் சோ்ந்தவா் பேரின்பம். இவா் 1984 ஆம் ஆண்டு முதல் கேரள மாநிலம் காலிகட்டபுத்தூரில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறாா். இவருக்கு சிபின் (24) உள்பட 2 மகன்கள் உள்ளனா். இவா் குடிமைப் பணித் தோ்வில் 408 ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளாா்.

இதுகுறித்து சிபின் கூறுகையில், கொல்லத்தில் உள்ள என்.ஐ.டி.யில் 4 ஆண்டுகள் பி.டெக் படித்து வந்தேன். அதன்பிறகு குடிமைப் பணித் தோ்வு எழுதினேன். நான் தற்போது இரண்டாவது முறையாக இத்தோ்வு எழுதிய நிலையில் வெற்றி பெற்றுள்ளேன் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT