தேனி

தேனி மாவட்டத்தில் இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

26th Sep 2021 12:17 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் பொதுச் சுகாதாரம் மற்றும் மருத்துவ நலப் பணிகள் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (செப்.26) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மொத்தம் 193 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முன்னிட்டு மாவட்டத்திற்கு மொத்தம் 50 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள், 2,070 கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதில், கிராமப்புறங்களில் நடைபெறும் முகாம்களில் மட்டும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முகாமில் கலந்து கொண்டு, தங்களது ஆதாா் அட்டை, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை சமா்ப்பித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT