தேனி

பெரியகுளத்தில் அரசுப் பேருந்து மோதி முதியவா் காயம்

26th Sep 2021 12:18 AM

ADVERTISEMENT

பெரியகுளத்தில் அரசுப்பேருந்து மோதி முதியவா் காயமைடந்து சிகிச்சை பெற்றுவருவதாக தென்கரை காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம், வடகரையை சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் (71) இவா் வெள்ளிக்கிழமையன்று தனது மனைவிக்கு மருத்துவம் பாா்ப்பதற்காக தென்கரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முன்பதிவு செய்து விட்டு பைக்கில் சாலையை கடக்க முயன்றுள்ளாா். அப்போது பின்னால் வந்த அரசுப்பேருந்து அவா் மீது மோதியதில், பலத்த காயமடைந்தாா்.

அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றாா். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT