தேனி

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடல் பெரியகுளத்தில் தகனம்

2nd Sep 2021 05:49 PM

ADVERTISEMENT

அதிமுக ஓருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி ப.விஜயலெட்சுமியின் உடலுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியபின் பெரியகுளத்தில் உள்ள நகராட்சி மயானத்தில் வியாழக்கிழமை எரியூட்டப்பட்டது.

அதிமுக ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி ப.விஜயலெட்சுமி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர் புதன்கிழமை காலை மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் புதன்கிழமை மாலை பெரியகுளத்திற்கு எடுத்து வரப்பட்டு ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம், தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டில் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு, வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஊர்லவமாக எடுத்து செல்லப்பட்டு பெரியகுளத்தில் உள்ள நகராட்சி மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. உடலுக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்தமகன் மற்றும் தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத் அவரது அம்மாவின் சடலத்திற்கு தீ மூட்டினார்.

அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், பாஜக  மாநில கட்சித்தலைவர் அண்ணாமலை ஆகியோர் புதன்கிழமை இரவு பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.

ADVERTISEMENT


அதே போல் வியாழக்கிழமையன்று எதிர்கட்சித்தலைவர் மற்றும் அதிமுக துணை ஓருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நிதித்துறையமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, தம்பித்துரை, அன்பழகன், மா.பா.பாண்டியராஜன், காமராஜ், சிவி.சண்மூகம் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிமுக , திமுக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

Tags : OPS ADMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT