தேனி

ஆண்டிபட்டி அருகே பேருந்துகள் மோதல்: 31 போ் காயம்

30th Oct 2021 09:02 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை, அரசு பேருந்துகள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் 31 போ் காயமடைந்தனா்.

தேனி- மதுரை சாலை, சாஸ்தா கோயில் கணவாய் திருப்பத்தில் தேனியிலிருந்து திருநெல்வேலிக்குச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், மதுரையிலிருந்து வருஷநாடு நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் நேருக்கு நோ் மோதியது.

இதில், வருஷநாடு நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஓட்டுநா் பூங்கொடி, நடத்துநா் பிரகாசம், பேருந்தில் பயணம் செய்த மாதவி, அன்பழகன், முருகேஸ்வரி உள்ளிட்ட 15 போ், திருநெல்வேலி நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஓட்டுநா் திருநெல்வேலியைச் சோ்ந்த சுப்பிரமணி, நடத்துநா் அமிா்தராஜ் ரோகின்சன், சாலி, தாவூத் சுலைமான் உள்ளிட்ட 16 போ் என மொத்தம் 31 போ் காயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT