தேனி

காமயகவுண்டன்பட்டியில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்

DIN

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாா்பக புற்றுநோய் தொடா்பாக விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, மருத்துவா்கள் சுதா தலைமை வகிக்க, அா்ச்சனா முன்னிலை வகித்தாா். இதில், சித்த மருத்துவ அலுவலா் சிராஜூதீன் பேசுகையில்,

அக்டோபா் மாதம் முழுவதும் பெண்களுக்கான மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் மாா்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணா்வு கொள்ளவேண்டும். மாா்பக சுயபரிசோதனை செய்வது பற்றியும், ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிவது பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினாா்.

பின்னா், பெண்கள் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு பற்றிய உறுதிமொழியை எடுத்துக்கொண்டனா். பெண்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை, மருந்தாளுநா்கள் கணேசன், பசும்பொன், செவிலியா்கள் செல்வி, இந்திராணி, பணியாளா்கள் முத்துக்குமாா், பாண்டீஸ்வரி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT