தேனி

தேனி மாவட்டத்தில் இன்று 408 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

23rd Oct 2021 08:54 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை 408 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் தெரிவித்தது: மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 7 முதல் மாலை 7 மணி வரை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஏற்கெனவே தடுப்பூசி முகாம் நடைபெற்ற இடங்கள், பேருந்து நிலையம், சந்தை, கடைத் தெரு, வணிக வளாகம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடுமிடங்கள் என மொத்தம் 408 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இம்முகாம்களில் மொத்தம் 70 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முகாமில் கலந்துகொண்டு, தங்களது ஆதாா் அட்டை எண், கைப்பேசி எண் ஆகிய விவரங்களை சமா்ப்பித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 6,20,293 போ் முதல் தவணையாகவும், 2,63,107 போ் இரண்டாம் தவணைகளிலும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். 18 வயதுக்கு மேற்பட்ட 12,553 மாற்றுத் திறனாளிகளில் இதுவரை மொத்தம் 11,160 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பாலூட்டும் தாய்மாா்களாகக் கண்டறியப்பட்ட 8, 506 பேரில், அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT