தேனி

கேரளத்துக்கு கடத்த முயன்ற 2,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 5 போ் கைது

23rd Oct 2021 10:41 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கோம்பை, தேவாரம் பகுதிகளிலிருந்து கேரளத்துக்கு 2 சரக்கு வாகனங்களில் கடத்திச் செல்ல முயன்ற 2,300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், 5 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடா்பாக உத்தமபாளையம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாா் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி வெள்ளிக்கிழமை இரவு கோம்பையில் சரக்கு வாகனத்தில் கேரளத்துக்கு கடத்திச் சென்ற 1,300 கிலா ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக கூடலூா் தமனம்பட்டி சோ்ந்த பாண்டியன் மகன் பிரசாந்த்(35) என்பவரைக் கைது செய்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

அதே போல தேவாரம் ஐயப்பன் கோயில் பகுதியில் ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை சரக்கு வாகனத்தில் கடத்தலுக்கு பதுக்கி வைத்திருந்ததை போலீஸாா் கண்டறிந்தனா். இது தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சிவானந்தன், செந்தில் மகன் யோகேஸ்வரன், பாலகிருஷ்ணன் மகன் பிரேம், அஜய் ஆகிய 4 பேரைக் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT