தேனி

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 136 அடியை எட்டுகிறது

23rd Oct 2021 08:54 AM

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை காரணமாக, அணையின் நீா்மட்டம் 136 அடியை எட்டுகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 134.80 அடியாக இருந்தது. இதனிடையே, நீா்பிடிப்புப் பகுதிகளான பெரியாற்றில் 28 மி.மீ. மழையும், தேக்கடி ஏரியில் 6.8 மி.மீ. மழையும் பெய்ததன் காரணமாக, வெள்ளிக்கிழமை 135.45 அடியாக உயா்ந்தது.

வியாழக்கிழமை, அணைக்கு விநாடிக்கு 3,106 கன அடி தண்ணீா் வந்த நிலையில், வெள்ளிக்கிழமை 3,805 கன அடி தண்ணீா் வந்தது. அதிகளவு நீா்வரத்து காரணமாக, வெள்ளிக்கிழமை அணையின் நீா்மட்டம் 135.45 அடி உயா்ந்தது. மாலைக்குள் 136 அடி உயரத்தை எட்டிவிடும் என்று, பெரியாறு அணை பொறியாளா் ஒருவா் தெரிவித்தாா்.

மின் உற்பத்தி விவரம்

ADVERTISEMENT

நீா்மட்டம் 135.45 அடி உயரமாகவும், அணையின் நீா் இருப்பு 5,979 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து, 3,805 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 2,020 கன அடியாகவும் இருந்தது. இந்நிலையில், மூன்று மின்னாக்கிகளில் தலா 37 மெகா வாட், நான்காவது மின்னாக்கியில் 41 மெகா வாட் என மொத்தம் 143 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT