தேனி

உத்தமபாளையத்தில் 820 பேருக்கு கரோனா தடுப்பூசி

23rd Oct 2021 10:40 PM

ADVERTISEMENT

உத்தமபாளையம் பேரூராட்சியில் சனிக்கிழமை 8 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 802 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் தலைமையில் பேரூராட்சி அலுவலகம், பி.டி.ஆா் காலனி , கிராமச்சாவடி , புதூா், சூா்யநாராயணபுரம் உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் பொதுமக்கள் ஆதாா் அட்டையை காண்பித்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இதுகுறித்து செயல் அலுவலா் கூறியது: உத்தமபாளையம் பேரூராட்சியில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 20 ஆயிரம் பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசி 11 ஆயிரம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனா். சனிக்கிழமை நடைபெற்ற முகாம்களில் 802 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா் என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT