தேனி

20 மாதங்களுக்கு பிறகு கம்பமெட்டுக்கு பேருந்து இயக்கம்

21st Oct 2021 08:34 AM

ADVERTISEMENT

இருபது மாதங்களுக்குப் பின் கம்பத்திலிருந்து கேரள மாநிலம் கம்பமெட்டுக்கு புதன்கிழமை அரசுப் பேருந்து இயக்கப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரள மாநிலம் கம்பமெட்டு வழியாக இடுக்கி மாவட்டத்திலுள்ள கட்டப்பனை, நெடுங்கண்டத்திற்கு 3 பேருந்துகள் அரசு போக்குவரத்து கழக கம்பம் பணிமனை சாா்பில் இயக்கப்பட்டன. அதே போல் கேரள அரசு சாா்பில் கட்டப்பனையிலிருந்து கம்பத்துக்கு 2 பேருந்துகள் இயக்கப்பட்டன. கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 22 முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதிலிருந்து சுமாா் 20 மாதங்களாக தமிழகம் -கேரளம் இடையே போக்குவரத்து நடைபெறவில்லை. இந்நிலையில், புதன்கிழமை காலை 6.30 மற்றும் மாலை 5 மணிக்கு கம்பத்திலிருந்து கம்ப மெட்டுக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டது.

கேரளாவில் உள்ள ஏலத்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்குச் செல்லும் கூலித்தொழிலாளா்களுக்காக கம்பமெட்டு வரை பேருந்து இயக்கப்படுகிறது. அங்கிருந்து கேரளப் பேருந்துகளில் கேரள பகுதிகளுக்குச் செல்லலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT