தேனி

கம்பம் பகுதியில் இன்று மின்தடை

21st Oct 2021 08:33 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் வியாழக்கிழமை (அக்.21) மின் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மின்வாரிய சின்னமனூா் செயற்பொறியாளா் ரமேஷ்குமாா் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் சாா்பில் கம்பம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரையில் கம்பம் , கூடலூா், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், க.புதுப்பட்டி,காமயகவுண்டன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT