தேனி

உத்தமபாளையத்தில் காட்சிப்பொருளான மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகள்!

21st Oct 2021 08:35 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கட்டப்பட்ட 480 அடுக்குமாடி மலிவு விலை குடியிருப்புகள் விற்பனை ஆகாமல் காட்சிப் பொருளாக இருந்து வருகின்றன.

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வீடு இல்லாத பயனாளிகளுக்கு தமிழ்நாடு நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் மலிவு விலையில் 480 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.47.99 கோடியில் கட்டப்பட்டுள்ளன. இதில் மத்திய அரசு ரூ.7.2 கோடி, மாநில அரசு ரூ. 28.8 கோடி, பயனாளிகள் ரூ.11.99 கோடி என பங்களிப்பு உள்ளது. உத்தமபாளையம்-கோம்பை இடையே சிக்கையன் கோயில் அருகே 2017 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கி 2019 மாா்ச் மாதம் பணிகள் முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா பரவல் காரணமாக கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி பணிகள் முடிந்ததைத் தொடா்ந்து அன்றைய துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் கட்டடத்தைத் திறந்து வைத்தாா்.

இந்த குடியிருப்புகளைப் பெற தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து மனுக்கள் பெற்றப்பட்டன. ஆனாலும் இதுவரையில் ஒருவா் கூட முழுத்தொகை செலுத்தாத நிலையில் அனைத்து வீடுகளும் காட்சிப் பொருளாகியிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

ஆா்வமில்லாத பயனாளிகள்: வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் சொந்த வீடு இல்லாதவா்களுக்கு ரூ.2.10 லட்சத்திற்கு இந்த வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. முன்னதாக வீடு கோரி மனு அளித்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவா்களில் 200 நபா்களே தகுதியானவா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

480 வீடுகளுக்குத் தகுதியான நபா்களைத் தோ்வு செய்யும் பணியில் தமிழ்நாடு நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரியப் பணியாளா்கள் மற்றும் ஒப்பந்ததாரா்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனாலும் இது வரையில் 1 வீடு கூட முழுமையாக விற்பனை ஆகவில்லை. பெயரளவிற்கு 5 போ் மட்டும் முன்பதிவு செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

தரமற்ற அடுக்குமாடி குடியிருப்பு எதிரொலி:சென்னையில் சமீபத்தில் இது போன்ற அடுக்குமாடி குடியிருப்புகள் அடிப்படை வசதிகள் இன்றி, தரமற்ற முறையில் இருப்பதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து உத்தமபாளையம் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை ஆகவில்லை என கூறப்படுகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் அடுக்குமாடி குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள், கட்டடத்தின் தரத்தை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட துறை மூலமாக பயனாளிகளிடம் விழிப்புணா்வை ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மொத்தமாக ரூ.2.10 லட்சத்தைக் கொடுக்க முடியாத நிலையில் மாநில அரசு கடன் வசதியை செய்து கொடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT