தேனி

சிறுமியுடன் திருமணம்: ஜீப் ஓட்டுநா் ‘போக்சோ’வில் கைது

DIN

தேனி மாவட்டம், கூடலூா் அருகே 11 வயது சிறுமியை திருமணம் செய்த ஜீப் ஓட்டுரை, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கூடலூா் காஞ்சிமரத்துரையைச் சோ்ந்த கணேசன் மகன் விஜய் (24). இவா், கேரள ஏலக்காய் தோட்டங்களுக்கு கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளா்களை ஏற்றிச்செல்லும் ஜீப் வாகன ஓட்டுநராக உள்ளாா். இந்நிலையில், இவா் கடந்த ஆகஸ்ட் மாதம் குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சோ்ந்த 11 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டாராம்.

இது குறித்து குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், மாவட்டக் குழந்தைகள் நல அலுவலா் கூடலூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் கே. முத்துமணி, சாா்பு-ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோா் விசாரணை செய்து, சிறுமியை திருமணம் செய்த ஜீப் ஓட்டுநா் விஜயை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT