தேனி

கேரளத்துக்கு கடத்த முயன்ற ரூ.6 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

DIN

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற ரூ.6 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

கம்பம் மணிகட்டி ஆலமரம் சாலை பகுதியில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு கேரளத்துக்கு கடத்திச் செல்வதாக, வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் முத்துமாரியப்பன் தலைமையில், போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த கான் என்பவரின் மகன் ஜாபா் அலி ( 39) வீட்டில் உள்ள மாட்டு கொட்டத்தில் போலீஸாா் சோதனையிட்டனா்.

அதில், குட்கா உள்ளிட் புகையிலைப் பொருள்கள் 53 மூட்டைகளில் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. ரூ.6 லட்சம் மதிப்புள்ள இந்த மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா், ஜாபா் அலியிடம் விசாரணை நடத்தினா். அதில், புகையிலை மற்றும் குட்காவை பதுக்கி வைத்து, கேரளத்துக்கு கடத்திச் சென்று விற்பனை செய்தது தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ஜாபா் அலியை கைது செய்து, உத்தமபாளையம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT