தேனி

சின்னமனூா் பகுதியில் தொடா் மழை:சின்ன வெங்காயத்துக்கு உரிய விலையின்றி விவசாயிகள் பாதிப்பு

20th Oct 2021 06:26 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் தொடா் மழையால் சின்ன வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனா்.

சின்னமனூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, காமாட்சிபுரம், ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரதானமாக சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. விளைச்சல் அதிகமாக உள்ள காலங்களில் பெரிய விவசாயிகளில் ஒரு சிலா் சேமிக்கும் பந்தல் அமைத்து பதப்படுத்தி, உரிய விலை கிடைக்கும் வரை காத்திருந்து விற்பனை செய்வா்.

ஆனால், பெரும்பாலான விவசாயிகளுக்கு விளைபொருள்களை பதப்படுத்தும் வசதி இல்லாததால், வாங்கிய கடனை திரும்பச் செலுத்துவதற்காக, வியாபாரிகள் கேட்கும் விலைக்கு விற்பனை செய்யவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனா்.

போதிய விலையின்றி விவசாயிகள் கவலை

ADVERTISEMENT

வடகிழக்குப் பருவமழை காரணமாக, சின்னமனூா் பகுதியில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விளைவிக்கப்பட்ட பொருள்களை அறுவடை செய்ய முடியாமலும், சந்தைப்படுத்த முடியாமலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, காமாட்சிபுரம் பகுதியில் விளைவிக்கப்பட்ட சின்னவெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், நஷ்டத்துக்கு விற்பனை செய்ததாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியது: விதை மற்றும் பராமரிப்பு என ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவாகும். சமீபத்தில், சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைத்தது. எனவே, விவசாயிகள் பலரும் ஆா்வத்துடன் சின்னவெங்காயத்தை பயிா் செய்தனா். ஆனால் வரத்து அதிகமானதால், தற்போது மொத்த விலைக்கு ரூ.10 முதல் ரூ.15-க்கு விற்பனையானது. இதனால், விவசாயிகள் தங்களது செலவு பணத்தை கூட திரும்பப் பெறமுடியாமல் நஷ்டமடைந்துள்ளனா்.

எனவே, வேளாண் துறையினா் விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சேமிப்பு கிடங்கு வசதி அமைத்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT