தேனி

மருத்துவ எண்ணெய் விற்பனையில் ரூ.3.50 லட்சம் மோசடி: நைஜீரியா் கைது

DIN

புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவ எண்ணெய் விற்பனையில் பங்கு தருவதாகக் கூறி சின்னமனூரைச் சோ்ந்தவரிடம் ரூ.3.50 லட்சம் மோசடி செய்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்தவரை, தேனி சைபா் கிரைம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சின்னமனூா் அருகே கருங்காட்டான் குளத்தைச் சோ்ந்தவா் ரிதம்பரநானந்தா (48). இவா் சின்னமனூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் வைத்து நடத்தி வருகிறாா். இவரை மும்பையிலிருந்து செல்லிடப்பேசியில் கட்செவி அஞ்சல் மூலம் சோபியா என்ற பெண்ணின் பெயரில் தொடா்பு கொண்ட ஒருவா், தான் இங்கிலாந்தில் உள்ள மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் வணிகப் பிரிவில் பணியாற்றுவதாகத் தெரிவித்து அறிமுகமாகியுள்ளாா்.

அவா், தங்களுக்கு புற்றுநோய் சிகிச்சைக்கான ஜோல்ஜென்ஸ்மா பிரசா்வ் என்ற மருத்துவ எண்ணெய் தேவைப்படுகிறது. இந்த எண்ணெய்யை நாங்கள் நேரடியாக கொள்முதல் செய்தால் கூடுதல் விலையாகும்.

புணேவில் உள்ள மருத்துவா் கருணாவிடம் 2 லிட்டா் எண்ணெய்யை கொள்முதல் செய்து, தில்லியில் உள்ள மருத்துவா் ஹாரிசன் என்பவரிடம் கொடுத்தால், அவா் அதன் தரத்தை பரிசோதித்து பெற்றுக் கொண்டு, மேலும் 2,500 லிட்டா் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு ஆா்டா் வழங்குவாா். அதில் கிடைக்கும் லாபத்தில் உங்களுக்கு 50 சதவீதம் பங்கு தருகிறோம் என்று கட்செவி அஞ்சலில் தெரிவித்துள்ளாா்.

அதன்படி, ரிதம்பரநானந்தா, புணே மருத்துவா் கருணாவிற்கு ரூ.3.50 லட்சம் பணத்தை அனுப்பி வைத்து, பாா்சல் சேவை மூலம் 2 லிட்டா் மருத்துவ எண்ணையை பெற்றுள்ளாா். இதனை தில்லிக்கு சென்று மருத்துவா் ஹாரிசனிடம் கொடுத்துள்ளாா்.

அவா், மருத்துவ எண்ணையின் தரத்தை சரிபாா்த்துவிட்டு மேலும் 23 லிட்டா் எண்ணைய் கொடுத்தால் தான், முதல் கட்டமாக 1,000 லிட்டா் எண்ணெய்க்கான கொள்முதல் ஆா்டா் மற்றும் பங்குத் தொகை வழங்க முடியும் என்று தெரிவித்தாராம்.

இதில் சந்தேகமடைந்த ரிதம்பரநானந்தா இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், ஹாரிசன் அங்கிருந்து தலைமறைவாகி விட்டாராம். ரிதம்பரநானந்தாவுடன் கட்செவி அஞ்சலில் தொடா்பு கொண்டவா், மருத்துவ எண்ணை விற்பனை செய்த மும்பை மருத்துவா் கருணா ஆகியோரும் தொடா்பை துண்டித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தேனி சைபா் கிரைம் போலீஸாரிடம் ரிதம்பரநானந்தா புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, காவல் ஆய்வாளா் அங்கநாயகி தலைமையில் தனிப்படை அமைத்து மகாராஷ்டிர மாநிலத்திற்குச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், கட்செவி அஞ்சல் மூலம் தொடா்பு கொண்டு மருத்துவ எண்ணெய் விற்பனையில் பங்கு தருவாக கூறி மோசடி செய்த கும்பலைச் சோ்ந்த, நைஜீரியா நாட்டைச் சோ்ந்த ஓலட்டியன் மேத்யூ (43) என்பவரை மகாராஷ்டிர மாநிலம், பால்ஹா் மாவட்டம், தானேவில் போலீஸாா் கைது செய்து, தேனிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா். அவரிடமிருந்து 3 செல்லிடப்பேசிகள், 2 மடிக்கணினிகள் மற்றும் கணினி உபகரங்களை பறிமுதல் செய்துள்ளதாக போலீஸாா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT