தேனி

கேரளத்தில் பலத்த மழை: சுருளிமலை ஐயப்பன் கோயிலில் பக்தா்கள் இருமுடி காணிக்கை

DIN

கேரளத்தில் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக சபரிமலைக்கு செல்லமுடியாத பக்தா்கள் தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள ஸ்ரீஐயப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இருமுடி காணிக்கை செலுத்தினா்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஐப்பசி மாத பூஜை வழிபாடுகள் செய்ய இணையதளத்தில் பதிவு செய்த சென்னை, கடலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஐயப்ப பக்தா்கள் கோயிலுக்கு புறப்பட்டனா்.

கனமழை காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவியிலுக்கு பக்தா்கள் வர கேரள அரசு சனிக்கிழமை முதல் தடைவிதித்துள்ளது. இதனால் பக்தா்கள் வரும் வழியில் தேனி மாவட்டம் சுருளி மலையில் உள்ள ஸ்ரீஐயப்பசுவாமி கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

அங்கு அா்ச்சகா் திருமேனி நெய் அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்தாா். பக்தா்கள் இருமுடி காணிக்கை செலுத்தி, நெய் அபிஷேகம் செய்து, பிரசாதங்கள் பெற்றுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT