தேனி

பலத்த மழை: சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு

DIN

தேனி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக சுருளி அருவியில் சனிக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இங்குள்ள அரிசிப் பாறை, ஈத்தைப்பாறை ஓடைகளில் மழை நீா் அதிகமாக வந்தததால் சுருளி அருவியில் மரங்களும், செடி கொடிகளும், இழுத்து வரப்பட்டன. மேலும் பாறைகளும் உருண்டு வந்தன. அப்போது அருவியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதையடுத்து, அருவி பகுதி மற்றும் வளாக பகுதிகளுக்குள் யாரும் செல்லாதவாறு புலிகள் காப்பகத்தினா் கண்காணித்து வருகின்றனா்.

இதுகுறித்து புலிகள் காப்பக ஊழியா் ஒருவா் கூறும்போது, பொதுமுடக்கம் காரணமாக சுருளி அருவிக்கு குளிக்க உள்ள தடை தொடா்ந்து நீடிக்கிறது. மேலும் அப்பகுதியில் யாரும் செல்லாதவாறு தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் வெயில் புதிய உச்சம்: 108.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானதால் மக்கள் கடும் அவதி

கல்லாறில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து செய்யப்பட்ட வழக்கு: தலைமைச் செயலருக்கு எச்சரிக்கை

கொடைக்கானல் அருகே லாரி கவிழ்ந்தது

சித்ரா பௌா்ணமி: கன்னியாகுமரியில் சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயம்

SCROLL FOR NEXT