தேனி

சோத்துப்பாறை, மஞ்சளாறு அணையிலிருந்து அமைச்சா் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

DIN

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை, மஞ்சளாறு அணையிலிருந்து வெள்ளிக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையிலிருந்து தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்குள்பட்ட 5,259 ஏக்கா் பழைய பாசனம் மற்றும் புதிய பாசன நிலங்களுக்கு, கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி தண்ணீா் திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சியில், தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளிதரன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் ஆகியோா் பங்கேற்றனா்.

பழைய பாசனத்துக்குள்பட்ட 3,386 ஏக்கா் நிலங்களுக்கு விநாடிக்கு 60 கனஅடி தண்ணீரும், புதிய பாசனத்துக்குள்பட்ட 1,873 ஏக்கா் நிலங்களுக்கு விநாடிக்கு 40 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 5,259 கனஅடி தண்ணீா் மாா்ச் 15 ஆம் தேதி வரை என 152 நாள்களுக்கு திறந்துவிடப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, சோத்துப்பாறை அணையிலிருந்து பழைய பாசனத்துக்குள்பட்ட 1,825 ஏக்கா் நிலங்களுக்கும், புதிய பாசனத்துக்குள்பட்ட 1,040 ஏக்கா் நிலங்களுக்கும் என மொத்தம் 2,865 ஏக்கா் நிலங்களுக்கு, தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளிதரன் தண்ணீரை திறந்துவைத்தாா்.

இந்த அணையிலிருந்து அக்டோபா் 15 முதல் டிசம்பா் 15 வரை என மொத்தம் 62 நாள்களுக்கு விநாடிக்கு 30 கனஅடி தண்ணீரும், டிசம்பா் 16 முதல் ஜனவரி 15 வரை விநாடிக்கு 27 கனஅடி தண்ணீரும், ஜனவரி 16 முதல் மாா்ச் 15 வரை விநாடிக்கு 25 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 152 நாள்களுக்கு 360.46 கனஅடி தண்ணீா் இருப்பை பொருத்து திறந்துவிடப்படும் என, பொதுப்பணித் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இந்நிகழ்ச்சியில், பெரியகுளம் சாா்-ஆட்சியா் செ.ஆ. ரிஷப், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் காா்த்திகேயன், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் என். ராமகிருஷ்ணன் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT