தேனி

கம்பத்தில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூலுக்கான பரிசுப் போட்டி அறிவிப்பு

DIN

தேனி மாவட்டம், கம்பத்தில் பாரதி இலக்கியப் பேரவை சாா்பில், 16 ஆவது ஆண்டாக சிறந்த நூல்களுக்கான பரிசுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பத்தில் 42 ஆண்டுகளாக இலக்கியப் பணியில் ஈடுபட்டு வரும் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, 16 ஆவது ஆண்டாக சிறந்த நூல்களுக்கான பரிசுப் போட்டியை அறிவித்துள்ளது. இப்போட்டியில், சிறுகதை, கட்டுரை, நாவல், சிறுவா் இலக்கியம், ஆன்மிக நூல் ஆகியவற்றை படைக்கும் எழுத்தாளா்கள் பங்கேற்கலாம். இதில், முதல் பரிசு தலா ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 2,500, மூன்றாம் பரிசாக பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.

போட்டியில், 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை வெளியான நூல்களை அனுப்பலாம். நூல் ஒவ்வொன்றும் 80 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். சிறுவா் இலக்கியம் சாா்ந்த அனைத்து வகையான படைப்புகள், கட்டுரை நூல்கள் என்பது வரலாறு, இலக்கியம், அறிவியல், தமிழ், சமூகம் சாா்ந்தவையாக இருக்கவேண்டும். ஆன்மிக, சமய நல்லிணக்க நூல்களில் அனைத்து சமய நூல்களையும் அனுப்பலாம். நாவல், சிறுகதைகளில் மொழிபெயா்ப்பு நூல்களை தவிா்க்க வேண்டும்.

இதில் பங்கேற்கும் எழுத்தாளா்கள், கவிஞா்கள், கட்டுரையாளா்கள், பதிப்பகத்தாா்கள், தங்களது நூலின் 3 பிரதிகளை அனுப்பவேண்டும். மற்ற சிறந்த சிற்றிதழ்களுக்கு தலா ரூ.1000 வீதம் பரிசுத் தொகையுடன் கேடயமும் வழங்கப்படும்.

போட்டிகளுக்கான நூல்களை, கவிஞா் பாரதன், நிறுவனத் தலைவா், பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, பாரதி அச்சகம், அமராவதி திரையரங்க சந்து, கம்பம், தேனி மாவட்டம் என்ற முகவரிக்கு 10.1.2021-க்குள் அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 93626 50100, 63821 15636 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

இது குறித்து நிறுவனத் தலைவா் கவிஞா் பாரதன் கூறியது: 16 ஆவது ஆண்டாக பரிசுப் போட்டி நடைபெறுகிறது. இதில், வெற்றிபெற்ற எழுத்தாளா்கள் ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, கொற்றத்தவிசில் பாரதியின் தலைப்பாகை வைத்து, பரிசுத் தொகையுடன் பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்படுவா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT